Local

இந்தியாவில் பரவிய வைரஸ்தான் அதிக நாடுகளில் பரவி இருப்பதாக தெரிவிப்பு!

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் தான், உலகிலேயே அதிக நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று, இதுவரை 85 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதேபோல், இந்த வைரஸ் தான் தற்போது வரை கண்டறியப்பட்டதிலேயே அதிகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் என்றும் அந்த அமைப்பு கூறியிருந்தது.

இந்த நிலையில், ஜெனிவாவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் கேபிளிசிஸ், தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் தான் இந்த புதிய டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பெரும்பாலான நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருப்பதால் கொரோனா தொற்று இன்னும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading