World

இந்தியாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியது!

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் இந்தியா தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதருக்கு, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு சம்மன் அனுப்பி வரவழைத்துள்ளது.

இந்திய தூதரிடம், கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் கடுமையான கவலையை வெளியுறவுத்துறை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, எதிர்மறையான ஒரே மாதிரியான கருத்து, களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவை குறித்து பாகிஸ்தானின் ஆழ்ந்த கவலையை இந்திய தூதரிடம் தெரிவித்தது.

கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களை இந்திய அரசு கைது செய்து, முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading