World

இந்தியாவுடன் மோதுகிறதா மாலைத்தீவு?

மாலைத்தீவு கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலைத்தீவு அருகே நடுக்கடலில் தூத்துக்குடி, மதுரையைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது, எதிர்பாராத விதமாக மாலைத்தீவு கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்களின் படகு சென்றதையடுத்து, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலைத்தீவு கடற்படையினர் 12 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்னர்.

இதேவேளை, மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

‘‘இந்திய இராணுவம் மாலைத்தீவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

வேறு எந்த நாட்டின் இராணுவம் இங்கு இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான்.‘‘ என்றும் முகமது முய்சு எச்சரிதுள்ளார்.

மாலைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் சீனா சார்ப்பு கொள்கையை அந்நாட்டு அரசாங்கம் பின்பற்ற தொடங்கியுள்ளதாக கூறப்படும் பின்புலத்திலேயே இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் மாலைத்தீவு இறங்கியுள்ளது.

சுமார் 70 இந்திய இராணுவ வீரர்கள் மாலைத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியப் போர்க் கப்பல்கள் மாலைத்தீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து செல்ல உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading