Sports

இந்திய அணியை அடித்து நொறுக்கியது நியூசிலாந்து அணி!

இன்றைய 28வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின.

இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணியின் அணித் தலைவர் கென் வில்லியம்சன் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு வழக்கம்போல் தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே அடித்துள்ளது இந்திய அணி. அதில் அதிகபட்சமாக ஜடேஜா 26 ஓட்டங்களை அடித்துள்ளார்.

அதில் கே.எல்.ராகுல் 18, இஷான் கிஷான் 4, ரோஹித் சர்மா 14, விராட்கோலி 9, ரிஷாப் பண்ட் 12, ஹார்டிக் பாண்டிய 23, ரவீந்திர ஜடேஜா 26 ஓட்டங்களை அடித்துள்ளனர். பின்னர் 111 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி.

நியூஸிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். அதனால் 14.3 ஓவர் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி.

அதில் கப்டில் 20, மிச்சேல் 49, கென் வில்லியம்சன் 33,டேவன் 2 ஓட்டங்களை அடித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading