Sports

இந்திய அணியை முந்தியது இலங்கை அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021 -23) புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

காலி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 187 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தி இலங்கை இமாலய வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து 100 சதவீத வெற்றி விகிதத்துடன் இலங்கை அணி 12 புள்ளிகளை பெற்று  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021 -23) புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இலங்கை முதலிடம் பிடித்ததால் இந்தியா 54.17 சதவீத வெற்றி விகிடத்துடன் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்தப் பதிப்பில் ஒவ்வொரு வெற்றிக்கும் 12 புள்ளிகள் வழங்கப்படும் என்ற நிலையிலேயே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 50.00 சதவீத வெற்றி விகிததுடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும், 33.33 சதவீத வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் நான்காம் இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்து அணி 5வது இடத்தில் (29.17 சதவீதம்) உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading