Sports

இந்திய அணி அபார வெற்றி!

உலகக்கிண்ண ரி20 போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி நமீபியா அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் டேவிட் விஸ் 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 வீக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் ரோஹிட் சர்மா 56 ஓட்டங்களையும், கேஎல் ராஹுல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading