Local

இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்

இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறிய ரக இந்திய உளவு விமானம் ஒன்று, சங்க் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்தது. உளவு பார்ப்பதற்காக, பாகிஸ்தான் பகுதிக்குள் 600 மீட்டர் தூரம்வரை அத்துமீறி நுழைந்தது. இந்திய விமானத்தின் அந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள், ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும், இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும். மேலும், 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை இந்த ஊடுருவல் உணர்த்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கடந்த காலங்களிலும் இதுபோல் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், அதை இந்தியா ஆதாரங்களுடன் மறுத்து வந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading