Sports

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா புதிய உலக சாதனை படைத்தார்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில், பிராட் வீசிய 83 ஓவரில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் பிரையன் லாராவின், 19 ஆண்டு சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

பிராட் வீசிய 83 ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து ´வைடு´ முறையில் 5 ஓட்டங்களை பெற்றுத்தந்தது.

´நோபால்´லாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்த பந்துகளை ´ஹாட்ரிக்´ பவுண்டரி விளாசினார்.

5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ஓட்டங்கள் விளாசப்பட்டது.

கடந்த 2003ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் ராபின் பீட்டர்சன் பந்து வீச்சில், ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் விளாசினார் பிரைன் லாரா.

அந்த சாதனையை ஜார்ஜ் பெய்லி (ஆஸி., – 2013) மற்றும் கேசவ் மகாராஜ் (தெ.ஆ – 2020) சமன் செய்தார்களே தவிர யாரும் முறியடிக்கவில்லை.

இந்நிலையில், பிராட்டின் ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், 19 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத லாராவின் சாதனையை, கேப்டனாக தான் பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா முறியடித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading