Cinema

இந்திய சினிமாவில் வெளிநாட்டு ஹீரோயின்கள்!

உலகம் கைக்குள் அடங்கிவிட்ட பிறகு ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது இப்போது.

அப்படித்தான் சினிமாவிலும். இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகை ஒருவர், மற்ற மொழியில் நடித்தாலே ஆச்சரியமாகப் பேசப்பட்டக் காலங்கள் இருந்தன.

இப்போது அப்படி ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் நடிக்கலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

ஒரு தமிழ் நடிகை, பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து ஏரியாவிலும் ஆல்ரவுண்ட்டாக நடிக்கலாம். அதேபோலத்தான் மற்ற மொழி நடிகைகளும். இப்போது அதையும் தாண்டி வெளிநாட்டு நடிகைகள், இந்திய சினிமாவில் நடிப்பது அதிகரித்து வருகிறது.

தமிழில் ஹீரோயினாக அறிமுகமான எமி ஜாக்சன், இங்கிலாந்தில் இருந்து வந்தவர். அங்கு சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் கவனம் இப்போது இந்தியப் படங்களில்தான் இருக்கிறது.

பாலிவுட்டில் நடித்துவரும் ஜாக்குலின் பெர்ணான்டஸ், இலங்கையைச் சேர்ந்தவர். இந்தியில் தொடர்ந்து நடித்து வரும் அவர், தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

நடிகை சன்னி லியோன் யார் என்பது பற்றியும் இப்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார் என்றும் சொல்வது, குற்றாலத்தில் அருவி இருக்கிறது என்று சொல்வது போலத்தான். அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்த புரூனா அப்துல்லா, பிரேஸில் நடிகை. இந்தியில் கிராண்ட் மஸ்தி, ஜெய் ஹோ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்தியில் மிக்கி வைரஸ், நாம் ஷபானா, மலாங் உட்பட சில படங்களில் நடித்துள்ள எல்லி அவ்ராம் (Elli Avram), ஸ்வீடனைச் சேர்ந்தவர். தமிழில் இவர் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

ராக்ஸ்டார், மெட்ராஸ் கபே, அசார் உட்பட சில படங்களில் நடித்துள்ள நர்கிஸ் ஃபக்ரி (Nargis Fakhri) அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் தமிழில் பிரசாந்தின் சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர். தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான கேத்ரினா கைஃப், பிரீட்டீஷைச் சேர்ந்தவர்.

இவருடைய சகோதரியும் பாலிவுட்டில் அறிமுக இருப்பதாகப் பேச்சு. சல்மான் கானின் காதலி என்று கூறப்படும் லுலியா வந்துர், ருமேனியாவைச் சேர்ந்தவர். இவரும் பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்கள் போல, இன்னும் சில நடிகைகள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்திய சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டு நடிகைகள் நிறைந்து கிடக்கும் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார்கள் நம் ஹீரோயின்கள். ஹாலிவுட்டில் பிசியாகிவிட்ட பிரியங்கா சோப்ரா, பாலிவுட் படங்களில் கமிட் ஆவதையே நிறுத்திவிட்டார். தீபிகா படுகோன், நீது சந்திரா, டிம்பிள் கபாடியோ ஆகியோரின் கதவுகளையும் தட்டிக்கொண்டிருக்கிறது ஹாலிவுட் வாய்ப்புகள்!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading