Local

இந்திய சூப்பர் ஸ்டாருடன் சனத் ஜயசூரிய சந்திப்பு!

இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக வருகை தந்திருக்கும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கையின் சுற்றுலாத் தூதுவருமான சனத் ஜயசூரிய சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சனத் ஜெயசூர்யா, ”மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்தது பெருமையாக இருந்தது. நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி.

அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்கள் நாட்டை பார்க்க அழைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading