Local

இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இடமாற்றப்படுகின்றமைக்கு எதிராக மக்களுடன் வீதிக்கு இறங்குவதாக கொழும்பு பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  தெரிவித்துள்ளார்.
” பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக அண்மையில் எனக்கு  அறியக்கிடைத்தது. விசேடமாக இந்த பரிசோதனைகளுக்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள். அந்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்வது தவறு. நாங்கள் வீதிக்கு இறங்குவோம் !
நாங்கள் தயார் எங்கள் உரிமைக்காக பேசுவதற்கு. அதனால் எங்கள் மக்களுடன் நாங்கள் வீதிக்கு இறங்குவோம். எங்களுக்கு இந்த தேர்தல் நடந்தாலும் ஒன்று நடக்காவிட்டாலும் ஒன்று” என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  தெரிவித்துள்ளார்.
அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணை தொடர்பாக திருப்தியடையக்கூடியதாக இல்லை எனவும், அரசாங்கத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து கண்டறியப்பட்டாலும் அவர்களிடம் விசாரணை செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (07) றாகமையில் தேவத்தை தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கொழும்பு பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading