Local

இனிமேலும் சலுகைகளை வழங்கமுடியாது பந்துல தெரிவிப்பு!

வாழ்க்கை செலவு அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கப்போகின்றது என அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்கான டொலர்களை பெற்றுக்கொள்வதில் வர்த்தகர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால்  வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
.
சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள அவர்  பால்மா  உள்நாட்டு எரிவாயு கோதுமா உட்பட பல பொருட்களின்  விலைகள் உள்நாட்டில் அதிகரிக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலர்கள் தொடர்பில் நாங்கள் நெருக்கடியை எதிர்கொண்;டுள்ளோம் என்பதை நாங்கள் மறைக்கவிரும்பவில்லை என தெரிவித்துள்ள பந்துலகுணவர்த்தன சர்வதேச சந்தையிலும் விலைகள் அதிகரிக்கின்றன  மேலும் சலுகைகளை வழங்கமுடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நிதியமைச்சரை நிகர்வழி சந்திப்பொன்றின் மூலம் தொடர்புகொண்ட இறக்குமதியாளர்களிடம் விலை அதிகரிப்பு குறித்து செவ்வாய்கிழமை தெரிவிப்போம் என  தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading