Local

இனி வியர்வையில் இருந்து தொலைபேசிக்கு “சார்ஜ்” ஏற்றலாம்!

நாம் பாவிக்கும் தொலைபேசி மின்கலத்தில் (battery) இயங்குகின்றது.

ஆனால் நீண்ட பாவனையின் பின்னர் “சார்ஜ்” முடிந்ததும் மீண்டும் “சார்ஜ்” செய்ய வேண்டும். இந்நிலையில் நமது விரல்களின் வியர்வையில் இருந்து தொலைபேசிக்கு “சார்ஜ்” செய்யும் கருவியை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கென விரலின் மீது ஒட்டிக்கொள்ளும் வகையில் ஒரு “ஸ்டிரிப்” (Strip) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு தேவையான மின்சாரம் விரலில் ஏற்படும் வியர்வை துளிகள் மூலம் பெறப்பட்டு அதிலிருந்து தொலைபேசிக்கு “சார்ஜ்” செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் துாங்கும் போதும் இதன் மூலம் “சார்ஜ்” செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading