Cinema

இன்ப அதிர்ச்சியில் உறைந்த ‘ராஜமாதா’ சர்ப்ரைஸ் கொடுத்த நடிகைகள்!

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் பணிபுரிந்த ரம்யா கிருஷ்ணன், ரஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து முத்திரை பதித்தார்.

ரம்யா கிருஷ்ணனின் சமீப கால படங்களாக பாகுபலி, சூப்பர் டீலக்ஸ், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் அமைந்தன. அப்பேற்பட்ட ‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனது 51 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சக நடிகைகள் ஏற்பாடு செய்த பிறந்த நாள் பார்ட்டியில் த்ரிஷா, குஷ்பு, ராதிகா சரத்குமார், மது, லிஸ்ஸி, அனு பார்த்தசாரதி, உமா ரியாஸ் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகருமான சுரேஷ் சக்ரவர்த்தி, நடிகர் நகுல், அவரது மனைவி ஸ்ருதி மற்றும் பலர் இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர்.
நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடிகர் நகுல் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading