Local

இன்று அரசாங்கத்தின் வரவு செலவுகள் தொடர்பான இடைக்கால அறிக்கை!

இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் வரவு – செலவுகள் தொடர்பான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இன்று (27) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதோடு, குறித்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் நாளையும் (28) இடம்பெறும் என, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
குறித்த இரு தினங்களிலும் முற்பகல் 9.30 மணியிலிருந்து பிற்பகல் 6.30 மணி வரை இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நேற்று (26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டம், வாரம் தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையின் கீழ் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading