Local

இன்று அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான சிறப்பு விவாதம்!

அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல் மற்றும் மறைப்பதைத் தடுக்க ஜனாதிபதி வெளியிட்ட அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான சிறப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளது.

நாடாளுமன்ற விவாதம் இன்று காலை 10.30 முதல் மாலை 4.30 வரை விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் முதலில் கேள்வி நேரத்திற்கு திட்டமிடப்பட்ட போதிலும், அவசரகால விதிமுறைகள் மீதான விவாதத்திற்காக அவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அன்டிஜென் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய ஊடகவியளாளர்களுக்கும் இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவான அன்டிஜென் சோதனைகள் நாடாளுமன்ற வளாகத்தில் முற்பகல்  9.30 முதல் மதியம் 12.30 வரை நடைபெறவுள்ளது.

.இதேவேளை நாடாளுமன்றத்தில் அவசரகால விதிமுறைகளுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதன்போது, ஒகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட அவசரகால விதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில், இதற்கான. வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading