Local

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 447 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

அதேநேரம் 468 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.

இதேவேளை,  மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

அதேநேரம் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாய்க்கும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 363 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading