Local

இன்று முதல் அனைத்து இறைச்சி கடைகளுக்கும் பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகளை ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு உள்ளூராட்சி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் இன்று (12) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.

எனினும் இந்த தீர்மானம் கோழி இறைச்சி கடைகளுக்கு பொருந்தாது என உள்ளூராட்சி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல விலங்குகள் உயிரிழப்பதாகவும், அந்த விலங்குகளின் இறைச்சிகள் மனித பாவனைக்காக விற்கப்படும் அபாயம் உள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading