Local

இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் உச்சத்தில்

இலங்கைத் தீவு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மதியம் 12.13 மணிக்கு அம்பலங்கொடை, தல்கஸ்வல, பஸ்கொட, மித்தெனிய, உஸ்வெவ மற் றும் வீரவில ஆகிய இடங்களில் சூரியன் உச்சம் பெற்று காணப்படும்.

இதேவேளை, சபராகமுவ, மேல், வட மேல், மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை பெய்யும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading