Local

இன்று முதல் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் கைது!

இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கையொன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு பூராகவும் உள்ள அனைத்து வீதிகளிலும் மற்றும் அதிவேக வீதிகளின் நுழைவுகளிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், குடிபோதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்;, இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கடுமையான சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading