LocalSports

இன்று LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி!

ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இறுதிப் போட்டிக்காக கோல் கிளேடியேட்டர்ஸ் அணியும், ஜப்னா கிங்ஸ் அணியும் களமிறங்கவுள்ளன..

இவ்விரு அணிகளும் கடந்த வருடம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றது.

இவ்வருடம் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 02 கோடி ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 01 கோடி ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading