FeaturesLocal

இன்றைய இராசி பலன் – 09.12.2018

இன்றைய இராசி பலன் – 09.12.2018 (ஞாயிற்றுக்கிழமை) 

மேஷம்: உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்: இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மாலையில் நீண்ட நாள்களாகச் சந்திக்காமலிருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

மிதுனம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்.. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

கடகம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாய மும் தருவதாக அமையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்திலும் கவனமாக இருக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், நண்பர்களின் சந்திப்பு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாகத் தேடிய பொருள் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலாம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

விருச்சிகம்: பல வகைகளிலும் அனுகூலமான நாள். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு: அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள். சகோதரரிடம் கேட்ட உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பணியா ளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரரின் ஆதரவு கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்: பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிலருக்கு பிள்ளைகள் வகையில் சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சினை ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. சிலநேரங்களில் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீனம்: இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading