FeaturesLocal

இன்றைய இராசி பலன் – 18.10.2018

இன்றைய இராசி பலன் – 18.10.2018 (வியாழக்கிழமை)

மேஷம்: உற்சாகமான நாள். தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் லாபம் எதிர் பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மிதுனம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். மாலையில் குடும்பத் துடன் உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

கடகம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையான பணவரவு இருக்கும் என்பதால் மகிழ்ச்சி யுடன் காணப்படுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சி சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு உற்சாகமும், மகிழ்ச்சியும் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக உடல் அசதி ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர் களால் செலவுகள் ஏற்படக்கூடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

கன்னி: தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உடல்நலம் சற்று பாதிக்கப்படும். தேவையில்லாத அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரணை யாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்: மனதில் நிம்மதி ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிக்க முடியும். எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

தனுசு: குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படக்கூடும். காரியங்களில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது அவசியம்.

மகரம்: எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவான அணுகு முறை அவசியம். லாபம் வழக்கம்போலவே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கும்பம்: தேவையற்ற அலைச்சலும், அதனால் வீண் செலவுகளும் ஏற்படும். தேவையில்லாத குழப்பங்களின் காரணமாக எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருப்பீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading