Cinema

இயக்குனர் பாரதிராஜா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்

இயக்குனர் பாரதிராஜா தற்போதும் ரசிகர்களால் பேசப்படும் பல படங்களை இயக்கியவர். கடந்த சில வருடங்களாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் பாரதி ராஜா.இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சென்னையில் இருந்த பாரதிராஜா, இன்று சென்னையில் இருந்து தேனிக்கு சென்றுள்ளார்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு தேனி மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என உறுதி செய்த அதிகாரிகள, அவரது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். அவரது வீட்டில் அதற்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.சென்னை கொரோனா சிவப்பு மண்டலமாக உள்ளதால் அதிகாரிகள் சென்னையில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading