World

இரகசிய காதலிகளிடம் சொத்துக்களை ஒப்படைத்துள்ள உலகின் முன்னணி கோடீஸ்வரர்!

ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது சொத்துக்களை தனது இரகசிய காதலிகள், அவரது பிள்ளைகள், தனது நண்பர்கள் என பலரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் ஏஜன்சியின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கும் பிரிவு, பிரித்தானியாவிலிருக்கும் புடினுடைய சொத்துக்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது.

இதற்கிடையில், புடினுடைய மூன்று மகள்களில் ஒருவரான Elizaveta (19) என்ற இளம்பெண்ணுக்கு பிரித்தானியாவிலுள்ள சர்ரேயில் 100 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய சொத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த Elizaveta, புடினுக்கும் Svetlana Krivonogikh (46) என்ற பெண்ணுக்கும் தவறான உறவில் பிறந்தவராம். கடை ஒன்றில் சுத்தம் செய்யும் வேலை பார்த்த Svetlana, இப்போது ஒரு பெரும் கோடீஸ்வரி!

புடினுடைய கடுமையான விமர்சகரும், எதிர்க்கட்சித் தலைவருமான Alexei Navalny, புடின் எப்படி தனது எக்கச்சக்கமான சொத்துக்களை மறைக்க, தனது காதலிகள், பிள்ளைகள், கூட்டாளிகள், நண்பர்கள் ஆகியோரை பயன்படுத்திவருகிறார் என்பதைக் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். தற்போது அவர் புடினால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

தனது பிள்ளைகள் போக, புடினுடைய பால்ய நண்பர் ஒருவரின் மகன் ஒருவர் 500 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய சொத்தும், அவரது உறவினர் ஒருவர் 500 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய சொத்துக்களும் வைத்துள்ளார்களாம்.

மேலும், ரஷ்யாவிலுள்ள பெருந்தலைகள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபிளுக்கும் 50 சதவிகிதம் புடினுக்கு வந்து சேரவேண்டுமாம். ஆகவேதான், 200 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள புடின்தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என கருதப்படுகிறாராம். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading