Local

இரண்டாவது அலைமூலம் 41476 பேருக்கு கொரோனா 202 பேர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்றுவரை 41 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 202  பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த நவம்பர் மாதத்தில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா 2ஆவது அலைமூலம் கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 முதல் இன்றுவரை 18 ஆயிரத்து 869 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 9 ஆயிரத்து 720 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 556 தொற்றாளர்களும்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் 25 மாவட்டங்களிலும் 2ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 37 ஆயிரத்து 816 பேர்   குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading