Features

இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியுமா?

இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும் எனவும், எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் இருதய நோய் நிபுணர் டொக்டர் திஷ்னா அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்பட்ட இருதய நோய்களினால் பாதிக்கபட்டிருப்போர் கோவிட் தடுப்பூசி மாத்திரைகள் இரண்டையும் எடுத்துக்கொள்வதில் பாதகம் எதுவும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பய்பாஸ் சத்திர சிகிச்சை, ஸ்டென்ட் போட்டுக் கொண்டவர்கள் மற்றும் ஏனைய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இருதய நோயாளிகள் கோவிட் தொற்றுக்கு இலக்கானாலும் வழமையான மருந்துகளை பயன்படுத்த வேண்டும், மருத்துவர்கள் வேண்டாம் என்று கூறினால் மட்டும் பயன்படுத்த தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருதய நோயாளிகள் கோவிட் நோய் குறிகள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், கோவிட் வைரஸ் இருதயத்தை பாதிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading