Local

இறக்குமதி செய்யப்படும் 2,634 பொருட்கள் மீதான ‘செஸ்’ வரி நீக்கம்!

தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் கைத்தொழில்களைப் பாதுகாக்கவும், அரசாங்க வருமானத்தை ஈட்டவும் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்த ‘செஸ்’ வரி உள்ளிட்ட ஏனைய இறக்குமதி வரிகளைப் படிப்படியாக நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த வரி விதிப்பால் மூலப்பொருட்களின் இறக்குமதி செலவு அதிகரித்து, இலங்கையின் தயாரிப்புகள் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதற்கமைய, அடையாளம் காணப்பட்ட 2,634 பொருட்களுக்கான செஸ் வரியை 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகளில் முழுமையாக நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சுகள் தெரிவித்துள்ளன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading