Local

இறந்தபின் காதலிக்கு தாலி கட்டிய காதலன்!

காதலி திடீர் மரணமடைந்த காரணத்தினாலே அவருடைய இறுதிகிரியையின் போது காதலன் செய்த செயலை கண்டு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

10வருட காலமாக 22வயதுடைய அப் பெண்ணும் இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் நேற்று  முன் தினம்( 29.12.2022 )  திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் உயிரிழந்த தனது காதலிக்கு தாலி கட்டி அவரை சுமங்கலியாக வழியனுப்பிவைத்துள்ளார்.

குறித்த இளைஞனின் இச் செயலானது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் அதேவேளை கடந்த காலங்களில் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பினும் இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் இதுவே முதல் சம்பவமாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading