Cinema

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘சீயான்-60’!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் விக்ரமும், அவரது மகன் துருவ் விகரமும் இணைந்து நடிக்கின்றனர்.

பெயரிடப்படாத இந்தப் படத்தின் (‘சீயான்-60’) இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா இரண்டாம் அலை தொடங்கியபோது படத்தின் படப்பிடிப்பு பாதியில் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளது. ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருவதால், படம் விரைவில் நிறைவடையவுள்ளது.

விக்ரமின் 60 வது படமான இந்தப் படத்தில் தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்.

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளார் சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை தொடங்குவதற்குள் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்பது இவர்களது திட்டம்.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விக்ரம், துருவ் மற்றும் இதர படக்குழுவினர் மொத்தம் 60-க்கும் மேற்பட்டோர் தனி விமானம் மூலம் டார்ஜிலிங் சென்றுள்ளனர்.

மேலும் டார்ஜிங்கில் படமாக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் முடிந்து விட்டதாக தற்போது படக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்து துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட்டு வருவதாக கூறியுள்ளனர்.

இந்தப் படத்தில் சில காட்சிகள் மட்டும் நேபாள் எல்லைப் பகுதியில் படமாக்கபடவிருப்பதால் அதுவும் சில தினங்களில் முடிந்துவிடும். அத்துடன் ‘சீயான் 60’ படத்தின் வேலை அனைத்தும் முடிந்து விடும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிவரும் கோப்ரா படத்தில் பல வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார் விக்ரம்.

மிரட்டல், ஆக்‌ஷன், திரில்லர் என வித்தியாசமாக திரையில் தோன்றவுள்ளார். ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வெற்றி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading