இறைச்சிப் பிரியர்களுக்கு குதூகலம்: Delmo வழங்கும் இறைச்சி வகைகள் தற்போது Uber Eats மூலமாகக் கிடைக்கின்றன
இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்று விளங்கும் விநியோக சேவைச் செயலியான Uber Eats, நாடெங்கிலும் நுகர்வோர் தாம் விரும்பும் நேரங்களில் புத்தம்புதிய கோழி இறைச்சி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட இறைச்சித் தயாரிப்புக்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் முகமாக, இலங்கையின் முன்னணி கோழி மற்றும் இறைச்சி உற்பத்தி நிறுவனமான Delmo உடன் பிரத்தியேக கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளமை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக 10 விற்பனை மையங்களை உள்ளடக்கும் வகையில் விநியோக சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், எதிர்வரும் மாதங்களில் நாடளவியரீதியில் இக்கூட்டாண்மை மேலும் விஸ்தரிக்கப்படும். இதன் மூலமாக, சொசேஜஸ் மற்றும் உடனடியாக சமைத்து உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் அடங்கலாக, Delmo வழங்கும் புத்தம்புதிய மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கோழி இறைச்சி தயாரிப்புக்கள் வரிசை நேரடியாக Uber Eats app செயலியில் கிடைக்கப்பெறுகின்றது.
நாடெங்கிலும் 140 க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களுடன் இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய கோழி வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற Delmo உடன் Uber Eats ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மை, இச்செயலியில் கிடைக்கப்பெறுகின்ற மளிகைப்பொருட்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் தெரிவை மேம்படுத்தியுள்ளதுடன், ‘Get Almost, Almost Anything’ என்ற அதன் வாக்குறுதியையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Uber Sri Lanka ன் மளிகைப்பொருட்கள் மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கான தலைமை அதிகாரி நிசாந்த் சேகர் அவர்கள் கூறுகையில்: “Delmo உடனான எமது கூட்டாண்மை, அன்றாட அத்தியாவசியங்களுக்கு நாட வேண்டிய தளம் என்ற Uber Eats ன் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கையில் மிகவும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள இறைச்சி வர்த்தகநாமங்களில் ஒன்றை எமது செயலியில் இணைத்துள்ளமை மூலமாக, நுகர்வோர் தமது தேவைக்கேற்றவாறு புத்தம்புதிய, உயர் தர இறைச்சி தயாரிப்புக்களை சௌகரியமாகப் பெற்றுக்கொள்வதற்கு நாம் வழிவகுத்துள்ளோம்.”
Delmo Chicken & Agro ன் பொது முகாமையாளர் யசாஸ் விதாரண அவர்கள் கூறுகையில்: “இலங்கையில் அனைத்துக் குடும்பங்களுக்கும் மிகச் சிறந்த தரம் கொண்ட இறைச்சி தயாரிப்புக்களை வழங்குதில் Delmo எப்போதும் கவனம் செலுத்தியுள்ளது. முன்னரை விடவும் அதிகமான வாடிக்கையாளர்களை எட்டி, வேகமான, நம்பிக்கையான, மற்றும் சௌகரியமான வழிமுறையுடன் எமது வாக்குறுதியை நீட்டிப்பதற்கு Uber Eats உடனான கூட்டாண்மை எமக்கு இடமளிக்கின்றது.”
தமது தேவைக்கு வேண்டியவாறு பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போக்கு நுகர்வோர் மத்தியில் அதிகரித்துச் செல்லும் நிலையில், உணவுகள், மளிகைப்பொருட்கள், புத்தம்புதிய இறைச்சி வகை மற்றும் வீட்டுப்பாவனைப் பொருட்கள் என அன்றாடம் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் வேகமாகவும், மிகவும் நம்பிக்கைமிக்க வழியிலும் பெற்றுக்கொள்வதற்கு Uber Eats இடமளித்து வருகின்றது.

You must be logged in to post a comment.