Jobs

ஐரோப்பா மற்றும் ஜேர்மனியிலிருந்து பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் குழுவினர் அம்பேவல பண்ணைக்கு விஜயம் செய்துள்ளனர்

 

பனிசூழ்ந்த மலைச் சிகரங்கள், பசுமையான புல்வெளிகள், சிறப்பினப் பசுக்கள், நவீன, மதிநுட்பமிக்க கொட்டகைகள், பால் கறக்கும் நிலையங்கள், தெற்காசியப் பிராந்தியத்தில் மிகத் தூய்மையான பண்புடன் கிடைக்கும் பால் என இத்தனைக்கும் தனித்துவமான நாமமாக அம்பேவல திகழ்ந்து வருகின்றது. இந்த தனித்துவச் சிறப்புக்கள் அனைத்தும் துல்லியமானவை தானா என்பதை சோதனை செய்து உறுதிப்படுத்துவதற்காக பல்வேறுபட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொழிலதிபர்கள், விவசாய பண்ணையாளர்கள், மற்றும் பாலுணவு நிபுணர்கள் பெரும் எண்ணிக்கையிலான குழுக்களாக இப்பண்ணைக்கு விஜயம் செய்துள்ளனர். எமது தொழிற்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் அவர்கள் சோதனை செய்துள்ளதுடன், அம்பேவல பண்ணை வியக்கத்தக்கது மற்றும் ஆச்சரியமானது என்ற பூரண நம்பிக்கையுடன் அவர்கள் பண்ணையிலிருந்து திரும்பியுள்ளனர்.

 

இலங்கையில் இத்தகைய அளவில் நவீனமயமான, உயர் தராதரம் கொண்ட பண்ணை ஒன்று நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை தமக்கு வியப்பூட்டுவதாக வருகை தந்த சுற்றுலாக் குழுவின் தலைவரான லேர்ணிங் அவர்கள் குறிப்பிட்டார். ஐக்கிய இராச்சியத்தில் 900 கால்நடைகளைக் கொண்ட பண்ணையின் உரிமையாளரான சூ லூயிஸ் அவர்கள் அம்பேவல பண்ணையில் செயற்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் வியக்கத்தக்கவை என்றும், நாம் தொழிற்படும் மட்டம் பிரமிக்க வைப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த மட்டத்தில் இத்தகைய அளவுக்கு நவீன கொட்டகைகளை அம்பேவல கொண்டிருக்கும் என்பதை தான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய திரு. ஹென்றி அவர்கள், “இப்பண்ணையின் தொழிற்பாடுகள் எம்மை வெகுவாக ஈர்த்துள்ளன,” என்றும் குறிப்பிட்டார்.

 

அம்பேவல பாலை உபயோகித்து தயாரிக்கப்படுகின்ற சீஸ் மற்றும் யோகட் ஆகியவற்றைச் சுவைத்த பின்னர் அம்பேவல தயாரிப்புக்கள் ஐரோப்பிய தராதரங்களுக்கு இணையாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். மிகக் கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் அவர்கள் பெரிதும், போற்றிப் பாராட்டியுள்ளனர். அவர்களுடைய விஜயத்தைத் தொடர்ந்து, மத்தியில் அம்பேவல பண்ணைக்கு விஜயம் செய்யுமாறு நேரடி சுற்றுலாப் பயணிகளையும், தத்தமது நாடுகளிலுள்ளவர்களையும் தாம் தொடர்ந்தும் ஊக்குவிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

அம்பேவல பண்ணை தொடர்ந்தும் புத்தாக்கங்களுடன், விரிவடைந்து வருகின்ற நிலையில், இலங்கையில் பாலுற்பத்தித் துறையை முன்னேற்றி, இங்கு வருகை தருகின்ற உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு உண்மையில் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தனது இலக்கில் தொடர்ந்தும் மிகவுறுதியாக உள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading