Lead News

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அவசர விவாதம்

மத்திய கிழக்கு போர் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ‘அரிய மற்றும் அவசர’ விவாதம் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது.

ஈரான் தனது பொதுக் கட்டிடங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து, பஹ்ரைன் மற்றும் வளைகுடா நாடுகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த விவாதம் நடத்தப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்து இன்றுடன் (25) 26 நாட்கள் ஆகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளின் மீதும் தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அமெரிக்கா சுமார் 2,000 துருப்புக்களை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடங்கியது.

மேலும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதுடன், பகைமையற்ற கப்பல்களுக்கு மாத்திரம் அதனைத் திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இந்த ‘அரிய மற்றும் அவசர’ விவாதத்தில், ஈரானினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பொதுக் கட்டிடங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளமை குறித்து விவாதிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading