Local

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை முன்வைத்துள்ளார்.

தென் கொரியரான ஜூலி சங், தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறையில் பதில் உதவிச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், சீனா, வியட்நாம், ஈராக், கொலம்பியா ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலைனா டெப்லிட்ஸ் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading