Local

இலங்கைக்கு எதிரான T20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளின் Antigua வில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில், Dinesh Chandimal 54 ஓட்டங்களையும், Ashen Bandara 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

132 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.
இதற்கமைய, இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

அத்துடன், இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் Fabian Allen தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading