Local

இலங்கைக்கு ஜி 7 நாடுகள் உதவிக்கரம் நீட்டுகிறது!

பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கைக்கு கை கொடுக்க தயார் என ஜீ7 நாடுகளின் நிதித் தலைமகள் கூறியுள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களூடாக இலங்கைக்கான உதவிகளை வழங்கும் வழி வகைகளை அந்த நாடுகள் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், ஏனைய அமைப்புக்களுக்கும் தம் சார்பில் சிபாரிசினை செய்யவும் சம்மதித்துள்ளது.

G7 என்பது உலகின் ஏழு மேம்பட்ட பொருளாதாரங்களின் கூட்டாகும். உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நிதி அமைப்புக்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த அமைப்பானது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை உறுப்புரிமையாக கொண்ட ஒரு பலம் பொருந்திய அமைப்பாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading