Uncategorized

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவி!

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி வசதியொன்று வழங்கப்படவுள்ளதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 தனியார் வங்கிகளுக்கு இந்த நிதி வசதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அந்த நிதி வசதியைப் பயன்படுத்தி, உணவுப் பொருட்கள், மருந்துகள், உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading