LocalSports

இலங்கை,பாகிஸ்தானில் ஆசிய கிண்ணப் போட்டிகள்!

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 31-ம் திகதி தொடங்கி செப்டம்பர் 17-ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரை பொறுத்தவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நோபாளம் ஆகிய 6 அணிகள் ஆசிய கிண்ண ஒருநாள் தொடர் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்த 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் லீக் போட்டிகள் முடிவில் 4 அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. ஆசிய கிண்ணம் பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில், இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இலங்கையிலும் போட்டிகள் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading