Local

இலங்கைப் பெண்ணை கர்ப்பமாகியவரை திருமணம் செய்து வைத்த தமிழக பொலிசார்!

தமிழகத்தில் இலங்கைப்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை, தமிழக பொலிஸ் அதிகாரிகள் பிடித்து வந்து காதலியுடன் சேர்த்து வைத்துள்ள சம்பவம் ஒன்ரு இடம்பெற்றுள்ளது.

இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒருவர் கடலூர் மாவட்டம் புதுவண்டிப்பாளையம் பகுதியில் திருமணம் முடித்துள்ளார். அஅவர்களின் மகள் கலைச்செல்வி. இவர் கல்லூரி பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்விக்கும் , அதேபகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ்ச்செல்வனும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கலைச்செல்வி கர்ப்பம் ஆனார்.

இதனை காதலனிடம் கூறி, உடனடியாக திருமணம் செய்துக் கொள்ளுமாறு கேட்டபோது தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து ஆறு மாத கர்ப்பத்திற்கு பிறகு, இந்த விஷயம் கலைச்செல்வியின் பெற்றோருக்கு தெரிய வர, தமிழ்ச்செல்வனின் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை கேட்டுள்ளனர்.

எனினும் திருமணத்திற்கு தமிழ்ச்செல்வனின் பெற்றோர் மறுப்பு தெரிவிக்க, கலைச்செல்வி, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது புகார் அளித்தார். அதன்பின்னர் தமிழ்ச்செல்வனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் , கலைச்செல்வி சமர்பித்த ஆதாரங்களை பார்த்தப் பின்பு, அவரது கர்ப்பத்திற்கு காரணம் நான் தான் என ஒப்புக்கொண்டார்.

அத்துடன் தனக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் தான் என்றும், தனது வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தமிழ்ச்செல்வன் கூற, இரு வீட்டாரையும் அழைத்து வந்து சமரசம் பேசிய பொலிஸார், அதிகாரிகளின் செலவில் இருவருக்கும், பொலிஸ்நிலைய வளாகத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading