Local

இலங்கைப் பெண் கனடாவில் பிரதி அமைச்சராக தெரிவு!

கனடா அரசாங்கத்தின் உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துஷாரா வில்லியம்ஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. துஷாரா வில்லியம்ஸ் கொழும்பில் பிறந்து தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு பெண்கள் கல்லூரியில் முடித்தார்.

1991 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த அவர், கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய அபிவிருத்தி கற்கைகளில் முதுமாமணி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். அவர் சமூக, பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துஷாரா வில்லியம்ஸ் கனடா அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் பதவியை வகிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி ஆவார்.

எவ்வாறாயினும், உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கனடா அரசாங்கத்தில் பல பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading