இலங்கையர்களின் போராட்டத்திற்கு வனிந்து ஹசரங்க ஆதரவு!


இலங்கையில் நடக்கும் போராட்டத்திற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தவறான கொள்கையும், நிதி நிலைமையை கவனிக்க தவறியதும் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என நாளுக்கு நாள் இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பொதுமக்களின் இந்த போராட்டத்திற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
