Local

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் நாடு!

சவுதி அரேபியாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாரிய கட்டட நிர்மாண செயற்றிட்டங்களில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய தகுதியானர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கப்படுகின்றன. 

குறிப்பிட்ட செயற்றிட்டங்களில் உள்ளக கட்டட நிர்மாண கலைஞர், பொறியியலாளர், அளவை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் உருவாகலாம்.

இந்த தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

குறிப்பிட்ட தொழில்வாய்ப்புக்களில் ஆர்வமுள்ள தகுதியுடையோர் எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்   இணையத்திற்குள் பிரவேசித்து தமது தகவல்களை சேர்த்து பணியகத்தின் தரவு வங்கியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. 

பணியகத்தின் அவசர தொலைபேசி இலக்கமாக 1989 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading