Local

இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதை மறந்த முன்னாள் ஜனாதிபதி!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி யார் என்பதை மறந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது மேடையில் பேசிய காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமகால அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்தோம். ஜனாதிபதி கோட்டாபயவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம், இந்த நாட்டை வழிநடத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது பின்னால் இருந்த ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என கூறியதன் பின்னர் மகிந்த சுதாரித்துக் கொண்டார். அதன் பின்னர்  தனது உரையை மாற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

இது குறித்த காணொளி தற்போது சமூட ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading