Local

இலங்கையின் தற்போதைய நிலைக்கு பிரித்தானியா ஆதரவு!

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி உரிய நேரத்தில், அமைதியான மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவளிக்குமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு தீர்வுகாண்பது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்ட ஆட்சி, அதிகாரப் பகிர்வின் போது அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

அத்துடன், இந்த நடவடிக்கையின் போது தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதனை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading