Local

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஜூனில் 6.1 சதவீதத்திலிருந்து 2021 ஜூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 யூனின் 9.8 சதவீதத்திலிருந்து 2021 ஜூலையில் 11.0 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 ஜூனின் 2.9 சதவீதத்திலிருந்து 2021 ஜுலையில் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூலையில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2021 யூலையில் 0.63 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 0.37 சதவீதத்தினையும் 0.27 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் சீனி, காய்கறிகள், கருவாடு மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகள் அதிகரித்த அதேவேளை தேய்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. மேலும், உணவல்லா வகையினுள் பிரதானமாக போக்குவரத்து (பெற்றோல் மற்றும் டீசல்) மற்றும் உணவகம் அத்துடன் விடுதிகள் துணை வகைகளில் மாதகாலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அதிகரிப்பொன்று பதிவாகியது.

மேலும், ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், 2021 யூனின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 4.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 யூலையில் 4.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading