Local

இலங்கையின் பிரபல தொழிலதிபர் கமில் ஹுசைன் காலமானார்!

இலங்கையின் பிரபல தொழிலதிபர் கமில் ஹுசைன் கென்யாவில் நேற்று காலமானார்.

கமில் ஹுசைன் கொழும்பு 04 இல் அமைந்துள்ள சினெர்ஜி வென்ச்சர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

கமலின் மறைவு குறித்து தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி வழக்கறிஞர் அலி சப்ரி, கமில் ஹுசைன் உண்மையான நண்பர், தேசபக்தர் மற்றும் சமூக ஆர்வலர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மரணம் நெஞ்சை உலுக்கும் செய்தி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading