இலங்கையின் பிரபல தொழிலதிபரிடம் இருந்ததை வாங்கிய தொழிலதிபர்!!
ஆசிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ABC) தலைவர் மற்றும் பிரபல தொழில் அதிபரான ரேனோர் சில்வா, செலான் வங்கி பி.எல்.சி.யின் 5% பங்குகளை நாட்டின் முன்னணி முதலீட்டாளரான தம்மிக்க பெரேராவிடமிருந்து வாங்கியுள்ளார். இந்த பரிவர்த்தனையில் சுமார் 15 மில்லியன் பங்குகள் இடம்பெற்றுள்ளதுடன், ஒவ்வொரு பங்கிற்கும் சுமார் ரூ.105 என்ற விலையில், மொத்தம் சுமார் ரூ.1.58 பில்லியன் மதிப்பில் இந்த கொள்முதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொள்முதல், ஊடகத் துறையைத் தாண்டி தனது முதலீட்டுத் தளத்தை பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தும் ரேனோர் சில்வாவின் மூலோபாய முயற்சியின் இன்னொரு முக்கிய அடியாகக் கருதப்படுகிறது. அவர் ஏற்கனவே நிதி, காப்புறுதி மற்றும் ஊடகம் போன்ற துறைகளில் முதலீடுகள் செய்துள்ள நிலையில், இந்த புதிய நடவடிக்கை அவரின் வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறைகளில் உள்ள செல்வாக்கை மேலும் வலுப்படுத்துகிறது.
சந்தை விமர்சகர்கள் இந்தப் பரிவர்த்தனையை செய்லன் வங்கியின் நீண்டகால வளர்ச்சி திறனைப் பிரதிபலிக்கும் நம்பிக்கையான அறிகுறியாகவும், தம்மிக்க பெரேரா தனது முதலீட்டு தளத்தை மறுவமைத்துக் கொள்ளும் ஒரு கட்டமாகவும் காண்கின்றனர். இந்த ஒப்பந்தம், உள்ளூர் வங்கித் துறையில் தனியார் முதலீட்டாளர்களின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You must be logged in to post a comment.