Local

இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையின் வீதம் அதிகரிக்கும் வாய்ப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் வறுமையானது 43.9 வீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 3 வீதமாக குறைவடையும் எனவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதனால் இலங்கையின் சிறிய மற்றும் மத்திய தர தொழிற்துறையினர் கடும் போராட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை முன்னெடுத்துச் செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் சுற்றுலாப் பயணங்களுக்கான வரையறை நீடிக்கப்பட்டுள்ளதால், இலங்கையின் சுற்றுலாத்துறை முற்றாக வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading