Jobs

இலங்கையின் மிகப்பெரிய மொபைல் தொலைபேசி அனுபவ மையத்தை The Smart Phone Shop திறந்து வைத்துள்ளது

இலங்கையின் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான The Smart Phone Shop, 2026 பெப்ரவரி 14 அன்று இலங்கையின் மிகப்பெரிய மொபைல் தொலைபேசி அனுபவ மையத்தை மஹரகமவில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, நிறுவனத்தின் விரிவாக்கப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை நிலைநாட்டியுள்ளது.

 

தொழில்முனைவோரான திரு. அஷோக் விக்ரமசிங்க அவர்களால் 2012ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட The Smart Phone Shop, ஒரு சாதாரண சில்லறை விற்பனை தொழிற்பாட்டிலிருந்து இலங்கையின் போட்டிமிக்க மொபைல் தொழில்நுட்ப சந்தையில் முக்கியமானதொரு செயற்பாட்டாளராக உருவெடுத்துள்ளது. கடந்த தசாப்தத்தில், வெளிப்படையான கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகள், கடுமையான தர உத்தரவாத தரநிலைகள் மற்றும் நம்பகமான உத்தரவாத காப்பீடு ஆகியவற்றின் பக்கபலத்துடன், மிகவும் சிக்கனமான விலைகளில் அசல் ஸ்மார்ட்போன்களை வழங்குவதில் நிறுவனம் வலுவான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது.

 

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அனுபவ மையம் மிகவும் சனசந்தடி கொண்ட மகரகம வணிக மையத்தில் அமைந்துள்ளமுடன், ஸ்மார்ட்போன் கொள்வனவு அனுபவத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன விற்பனை மையம், வாடிக்கையாளர்கள் முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமங்களை நேரடியாக அனுபவிக்கும் சூழலில் ஆராயவும், பயிற்சி பெற்ற ஊழியர்களிடமிருந்து தொழில்முறை ஆலோசனையைப் பெறவும், ஒரே கூரையின் கீழ் விரிவான விற்பனைக்குப் பின்னரான ஆதரவைப் பெறவும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடு, தயாரிப்பு குறித்த ஆழமான ஈடுபாடு மற்றும் சேவை மகத்துவத்திற்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் இந்தக் கோட்பாடு வழக்கமான விற்பனையைத் தாண்டி சிறப்பானதாக காணப்படுகிறது.

 

நிறுவனத்தின் வளர்ச்சி வரலாறு அதன் ஸ்தாபகரின் தொழில்முனைவுப் பயணத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. தனது உயர்தரக் கல்வியை முடித்த பிறகு, திரு. விக்ரமசிங்க அவர்கள் ஏழு ஆண்டுகள் தென் கொரியாவில் பணிபுரிந்தார். இலங்கைக்குத் திரும்பி தனது சொந்தத் தொழிலை தொடங்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் விடாமுயற்சியுடன் சேமித்தார். 2012ம் ஆண்டில், அவர் தனது சேமிப்பை The Smart Phone Shop வர்த்தக முயற்சியைத் தொடங்க முதலீடு செய்தார். வர்த்தகநாமத்தின் முக்கிய தூண்களான நம்பகத்தன்மை, சிக்கனம் விலை மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

 

இதை திறந்து வைப்பது குறித்து கருத்து தெரிவித்த The Smart Phone Shop நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. அஷோக் விக்ரமசிங்க, “இந்த அனுபவ மையம் விரிவாக்கத்திற்கும் அப்பாற்பட்டது. இது பல ஆண்டுகாலம் கொண்ட ஒழுக்கமான வளர்ச்சி, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் இலங்கையில் விற்பனைத் தரத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நாங்கள் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வது மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்முறை வழிகாட்டுதலுடன் தொழில்நுட்பத்தை அனுபவிக்கக்கூடிய ஒரு இடத்தை உருவாக்குகிறோம்.”

 

இந்த மூலோபாய விரிவாக்கத்தின் மூலம் இலங்கையின் விற்பனைத் தொழில்நுட்பத் துறையில் தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதை The Smart Phone Shop தனது நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரத்தில், விலையில் முன்னிலை மற்றும் சேவை மகத்துவத்திற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

 

இலங்கையின் மிகப்பெரிய மொபைல் தொலைபேசி அனுபவ மையத்தைத் திறந்து வைத்துள்ளமை அளவு, புத்தாக்கம் மற்றும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர் ரக, நேரடி விற்பனை அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தும் வர்த்தகநாமத்தின் புதிய அத்தியாயமொன்றைக் குறிக்கிறது.

 

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading