Local

இலங்கையின் முதலாவது மணல் மேடு பாதை திறந்து வைப்பு!

நாட்டின் முதலாவது மணல் மேடு பாதை இன்று கொ ழும்பு துறைமுக நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டியூன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாதை இன்றைய தினம் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையில் இந்த மணல் மேடு பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள 3 பாதைகள் அமைந் துள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் தலை மையில் இந்த மணல் மேடு பாதை மீது பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறான சாகச விளையாட்டுக்கள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவரகூடியதாக அமையும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading